நாளை வெளியாகிறது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..லிங்க் இதோ..

 நாளை வெளியாகிறது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்..லிங்க் இதோ..



தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் இருபத்திரெண்டாம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3302தேர்வு மையங்களில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,534பள்ளிகளில் படித்த 7இலட்சத்து 80ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8,190பேர் என மொத்தம் 7இலட்சத்து 88ஆயிரத்து 740பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 86மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற்று நிறைவடைந்தது. 

இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே6)காலை 9:30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி,மாதம் மற்றும் வருடத்தை பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மேலும் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தாங்கள் சமர்பித்த உறுதி மொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கும் , தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அரசுத்தேர்வு இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த தற்கால மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90நாட்கள் வரையே செல்லுபடியாகும்.

மேலும் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்கள் விடைத்தாள் நகலைப் பெற்று அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

மேலும் https://www.tnresults.nic.in/

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 



Post a Comment

0 Comments