பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்/லிங்க் இதோ

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்/லிங்க் இதோ 



தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று அதன் பின்னர் விடுமுறை விடப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 9.10இலட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதினர்.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22வரை நடைபெற்றது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியிடப்படுகிறது.

எனவே தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்களை https://www.tnresults.nic.in

https://www.dge.tn.gov.in

https://results.digilocker.gov.in

என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி மாதம்,வருடம் ஆகியவற்றை பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தாங்கள் சமர்பித்த உறுதி மொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கும் , தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

Post a Comment

0 Comments