‍12th பிறகு‌ College போகாதீங்க/What's next after 12th/career guidance

‍12th பிறகு‌ College போகாதீங்க/What's next after 12th/career guidance 



 12th exam முடிந்து ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவ மாணவிகள் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கப் போகிறோம் என்ற குழப்பம் மற்றும் பயம் இருந்தாலும்,அதையும் தாண்டி 12ஆம் வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு என்ன படிக்கப் போகிறேன்,எந்த காலேஜில் படிப்பது,என்ன டிகிரி படிப்பது, என்பது போன்ற அதிகப்படியான கேள்விகளும் குழப்பங்களும், பயமும் அதிகமாக இருக்கும்.

12ஆம் வகுப்பிற்கு பிறகு நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு மற்றும் கல்லூரி எல்லாமே உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.எனவே எல்லாவிதத்திலும் யோசித்த பிறகு தான் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.நீங்கள் எடுக்கும் முடிவை அலட்சியமாக எடுத்து விடக்கூடாது.நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கப் போகிறீர்கள்?என்ன  Course படிக்கப் போகிறீர்கள்?என்பதைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.

மற்றவர்களின் ஆலோசனை மற்றும் கருத்தைக் கேட்பதில் தவறில்லை, ஆனால் முடிவு உங்களுடையதாகத்தான் இருக்க வேண்டும்.உங்களுக்கு சிறிய வயதில் இருந்தே ஏதாவது இலட்சியம், கனவு இருந்திருக்கலாம்.அல்லது நீங்கள் கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானம் செய்திருப்பீர்கள்.அதைப் பற்றியெல்லாம் சற்று ஆழமாகத் தெரிந்து கொண்டு தைரியமாகவும் தெளிவாகவும் முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்றால் அதைப் பற்றி எத்தனை பேரிடம் கேட்டு அந்த மொபைலைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள்.அந்த மொபைலைப் பற்றிய Reviews எல்லாவற்றையும் பார்த்து அதன் பிறகு தான் அந்த மொபைல் வாங்குவீர்கள்.ஒரு சாதாரண மொபைல் வாங்குவதற்கே இந்த அளவுக்கு கவனமாக இருக்கும் பொழுது, உங்களுடைய எதிர்காலத்தையே தீர்மானம் செய்கிற படிப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு உங்கள் கோர்ஸ் மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுங்கள்.நண்பர்கள் சொல்லுகிறார்கள்,பெற்றோர் சொல்லுகிறார்கள், உறவினர்கள் சொல்லுகிறார்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக முடிவு செய்து விடாதீர்கள்.

ஒருவேளை நீங்கள் IAS,IPS போன்ற படிப்புகளை படிக்க வேண்டும் என்ற ஒரு இலட்சியத்துடன் இருக்கிறீர்கள் என்றால் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்,அது சம்பந்தமான தகவல்களை சேகரியுங்கள்.

‍IAS,IPS ஆக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் கல்லூரியில் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்றில்லை. correspondence இல் வீட்டில் இருந்து கொண்டே degree படிக்கலாம்.

UPSC படிக்க வேண்டும் என்றால் நீங்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறீர்களா? அல்லது correspondenceஇல் படிக்கிறீர்களா?என்பது முக்கியமில்லை.

உங்களில் சிலருக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம்.correspondenceஇல் படித்தால் value இருக்குமா? என்று..

நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்?எங்கு படிக்கிறீர்கள்?என்பது முக்கியமில்லை.நீங்கள் உங்கள் skills and knowledge ஐ எப்படி வளர்த்துக்கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

நீங்கள் correspondenceஇல் உங்கள் degreeஐ படித்துக் கொண்டு அதே சமயத்தில் உங்கள் UPSC  exam ற்காக உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் Arts group எடுத்துப் படித்தாலே போதும்.BA History,BA Tamil,BA English போன்ற degreeஐ படித்தாலே போதும்.

கல்லூரி படிப்பு என்பது முக்கியமில்லை கல்லூரி படிப்பு என்பது entertainment, enjoyment என்பதைத் தாண்டி இந்த மூன்று வருடங்கள் உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய நாட்களாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.இதையெல்லாம் நினைவில் கொண்டு நீங்கள் கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்றால் படிக்கலாம்.

வட இந்தியாவில் உள்ள மாணவ மாணவிகள் correspondenceஇல்‌ ஏதாவது ஒரு degreeஐ படித்துக் கொண்டே தங்கள் UPSC exam ற்காக தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.இதனால் அவர்களுக்குத் தேவையான அளவு நேரம் செலவிட முடிகிறது.தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ள முடிகிறது.

ஆனால் நாம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு medical and engineering சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவதால் அது சம்பந்தமாகப் படிக்கவே நேரத்தை செலவிட முடிகிறது. UPSC exam ற்காக நமக்குத் தேவையான நேரம் செலவிட முடிவதில்லை.

உங்களது இலட்சியம் UPSC என்றால் நீங்கள் medical and engineering சம்பந்தப்பட்ட படிப்புகள் படிப்பது உங்கள் நேரத்தை விரயமாக்கும்.

ஒரு சிலர் நான் ஒரு வேளை UPSC exam‌ எழுதி வெற்றி பெற இயலவில்லை என்றால் வாழ்க்கையில் எனக்கு இந்த medical and engineering சம்பந்தப்பட்ட படிப்புகள் கை கொடுக்கும் என்று நினைத்து இந்தப் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.அப்பொழுது என்ன நடக்கும்!.. உங்களது இலட்சியம்,கனவு, நம்பிக்கை எல்லாம் இது இல்லை என்றால் மற்றொன்று என்று தான் இருக்கும்.

உங்களது இலட்சியம் UPSC தான் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கான காலம் மற்றும் நேரத்தை வீணாக்காமல் அதற்காக முழு கவனமும் ஆர்வமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.நேரத்தை வீணாக்காமல் ஒவ்வொரு மணித்துளியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானது.இந்த மூன்று வருடங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தது.இந்த உங்களை Divert செய்கிற நிறைய விஷயங்கள் இந்த பூமியில் இருக்கிறது.ஆனால்நீங்கள்  தேவையில்லாத விஷயங்களை தூக்கி எறிந்து விட்டு உங்கள் இலட்சியப்பாதையில் செல்ல வேண்டும்.வேறு எந்த விஷயத்திற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது . சிந்தித்து செயல்படுங்கள்.. உங்களது இலட்சியத்தை அடைய எனது அன்பான வாழ்த்துகள்...

The students who are waiting for the results of the 12th exam are confused and afraid of how many marks they will get, but beyond that, there are too many questions, confusion and fear like what will I study after the 12th result, which college to study, what degree to study.

The course and college you choose after 12th will decide your future.So you should take a decision only after thinking about everything. You should not take the decision carelessly. You should have clarity about which college you are going to study and what course you are going to study.

There is nothing wrong in asking advice and opinions from others, but the decision should be yours. You may have had an ideal, a dream from a young age, or you have already decided what you want to study in college.

For example, if you want to buy a mobile phone, how many people do you ask about it and get to know about that mobile phone. After seeing all the reviews about that mobile phone, you buy that mobile phone. When you are so careful to buy an ordinary mobile phone, how much more careful should you be in matters related to studies that decide your future. 

Take decisions regarding your course and college with that in mind. Don't make a decision because of what friends say, parents say, relatives say, neighbors say.

Maybe you have an ambition to study courses like IAS,IPS then what should we do for that then collect related information.


If you want to become IAS, IPS, you don't have to join college. 

You can study correspondence degree from home.


Are you joining a college if you want to study UPSC? 

Or do you study in correspondence? It doesn't matter.


Some of you may have a doubt. Is there any value in reading correspondence? 

that..


It doesn't matter how you study or where you study. It's how you develop your skills and knowledge that matters.You can study your degree in correspondence and at the same time prepare yourself for your UPSC exam.

It is enough if you take Arts group and study degree like BA History, BA Tamil, BA English etc.

College studies are not important. College studies are entertainment and enjoyment. Don't forget that these three years will be the days to decide your future. Keep this in mind if you want to study in college.

Students in North India prepare themselves for their UPSC exam by studying some degree in correspondence. This allows them to spend as much time as they need. They are able to prepare themselves thoroughly.

But after completing twelfth standard, we start studying in medical and engineering related colleges, so we can spend time studying related to that. 

We cannot spend enough time for UPSC exam.

If your aim is UPSC then studying medical and engineering related courses will waste your time.

Some people will focus on this course thinking that if I am not able to write the UPSC exam and succeed in life, these courses related to medical and engineering will give me a hand. Then what will happen!.. All your ideals, dreams and hopes will be something else if it is not this.

If you think that UPSC is your ideal then you should have full attention and passion for it without wasting your time and time. Every hour is very important for you without wasting time. These three years are very valuable. There are many things in this world which divert you. But you should throw away the unnecessary things. 

You should leave and go on your ideal path. You should not give importance to any other thing. 

Think and act.. my best wishes to achieve your ideal…

என்ன பிரண்ட்ஸ் இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் நன்றி 🙏....




Post a Comment

0 Comments