UPSC Civil Service Exam Explained In Tamil

 UPSC Civil Service Exam Explained In Tamil



While studying, everyone dreams of writing the UPSC Civil Services Exam and becoming an IAS.


Want your dream to come true? So what should you study? 
How to prepare for the exam? 
This post will surely answer many questions like.



UPSC Civil Services


The Union Public Service Commission (UPSC) is a separate organization set up to select qualified personnel for Indian government jobs.


This organization receives the applications for the jobs of various departments of the Government of India and selects the qualified employees through written examination and direct examination.



*Indian Civil Service (IAS)


*Indian Police Service (IPS)


*Indian Foreign Service (IFS)


Regulates such services and regulates the working life, training and service rules of the employees.

UPSC Civil Services


Indian demography is of two types.


*All India Services


*Central Services


All India Jobs


*Indian Civil Service (IAS)


*This Police Service (IPS)


*Indian Forest Service (IFS)



Intermediate Civil Works


*Indian Foreign Service (IFS)


*Indian Revenue Service (IRS)-Income Tax


*Indian Revenue Service (IRS)-Customs


* Indian Telecom


*Indian Postal Service


*Indian Railway Service Mechanical Engineer (IRSME)


*Indian Railway Service Electrical Engineer (IRSEE)


*Indian Railway Works Engineer (IRSE)


*Indian Railway Service Signal Engineer (IRSSE)


*Indian Railway Depository Service (IRSS)


*Indian Survey & Accountancy (IA& AS)


*Indian Economic Mission (IES)


*India Post & Telecom Accounts and Finance Function (IP&TAFS)


*Indian Railway Accounts Service (IRAS)


*Indian Railway Transport Service (IRTS)


*Indian Railway Staff Service (IRPS)


*Military engineering work


*Railway Protection Force


*Indian Land Surveying Mission


There are various tasks like

UPSC Civil Services Educational Qualification :


Anyone who has completed basic education and any degree can crack the UPSC exam.


But it is not possible to crack the UPSC exam without proper practice and effort.



UPSC Civil Services


Age Limit :


All have a minimum age of 21.


Maximum:


*General category up to 33 years


*Other Backward Classes (OBC) up to 35 years


* SCSDT candidates can write civil service exam upto 37 years of age.


*General category candidates can write civil service exam 6 times subject to their age limit.


*Other Backward Classes (OBC) can appear for Civil Services 9 times within their age limit.


*SC/ST category can appear for civil services as many times as they want within their age limit.



UPSC Civil Services Exam :


UPSC Civil Services Exam consists of three stages.


1*Preliminary exam


2*Mains Exam


3*Personality Test.

Every year the exam notification is released in February.


20 to 25 days will be given to apply from the date of notification.


The preliminary examination will be held in the month of June and the results will be declared after one month of the examination.


After passing this, 10 to 15 days time will be given to apply for the main exam.


DAF application form should be filled in this.


After that the exam will be held in September every year.


Exam results will be published in three months.


The interview will be held in a month after these results are released.


Preliminary examination marks will not be taken into the final result.



Preliminary Exam:


General studies (General knowledge paper)-100Questions:200Marks


CSAT (Civil Service Aptitude Test) 80 Questions: 200 Marks.

Main Exam:


Only those who have been declared successful in the preliminary examination by the examination board are eligible to appear in the main examination.


12 or 13 times as many candidates as there are vacancies will be selected for main examination.


This is a comprehensive essay writing test.


Your ability to respond is critical.


Mains exam will be conducted for 3 hours.



Scheme of Examination:


Qualifying Examination-Two Papers


Essay Paper --One Paper  -1×250=250



General Knowledge -Four Papers-4×250=1000



Optional Subject -Two Papers -2×250=500



Personality test – 275 marks



Total Marks-2025.



Main Options:


Qualifying Test:


Paper-1


Language Course – 300 Marks


Students can choose any one of the Indian languages.

Paper-2


English – 300 Marks


The following papers will be revised only after passing Paper 1 and 2.



Mains Exam :


Paper-1


Essay Syllabus – 250 Marks


Students can write in any language they like.



Paper-2


General Knowledge-1 (250 Marks)


(Indian Heritage and Culture, World History, World Geography, and Society.)



Paper-3


General Knowledge-2 (250 Marks)


(Social Justice, Public Administration, Politics, Constitutional Law and International Relations).



Paper-4


General Knowledge -3 (250 marks).


(Technology, Economic Development, Biodiversity, Environment, Conservation and Disaster Management).



Paper-5


General Knowledge-4 (250 Marks)

(ethics, honesty, and competence).


Any optional subject


Paper-6

Optional Subject Paper -A--250 Marks


Paper-7

Optional Subject Paper -B--250 Marks


Personality Test:

Total Marks 275.

படிக்கின்ற காலத்தில் எல்லாருக்கும்  UPSC Civil Services Exam எழுதி வெற்றி பெற்று IAS ஆக வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும்.

உங்கள் கனவு நடக்க வேண்டுமா?அப்படியென்றால் நீங்கள் என்ன படிக்க வேண்டும்? தேர்விற்கு எப்படி தயார் ஆவது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இந்தப் பதிவு நிச்சயமாக இருக்கும்.


UPSC Civil Services 

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (union public service commission) அல்லது (UPSC),இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும்.

இவ்வமைப்பு இந்திய அரசின் பல துறைகளின் பணிகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.


*இந்திய ஆட்சிப் பணி (IAS)

*இந்தியக் காவல் பணி (IPS)

*இந்திய வெளிநாட்டுப் பணி (IFS)

போன்ற பணிச் சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.

UPSC Civil Services

இந்தியக் குடியியல் இரண்டு வகைப்படும்.

*அனைத்திந்தியப் பணிகள்(All India Services)

*நடுவண் குடியியல் பணிகள் (Central Services)

அனைத்திந்தியப் பணிகள் 

*இந்திய ஆட்சிப் பணி (IAS)

*இந்தக் காவல் பணி (IPS)

*இந்திய வனப் பணி (IFS)


நடுவண் குடியியல் பணிகள் 

*இந்திய வெளிநாட்டுப் பணி (IFS)
*இந்திய வருவாய்ப் பணி (IRS)-வருமான வரி 
*இந்திய வருவாய்ப் பணி (IRS)-சுங்கம்
*இந்திய தொலைத்தொடர்புப் பணி
*இந்திய அஞ்சல் பணி
*இந்திய இரயில்வே பணி இயந்திரப் பொறியாளர் ( IRSME)
*இந்திய இரயில்வே பணி மின்னியல் பொறியாளர் (IRSEE)
*இந்திய இரயில்வே பணி பொறியாளர் (IRSE)
*இந்திய இரயில்வே பணி சமிக்ஞை பொறியாளர் (IRSSE)
*இந்திய இரயில்வே வைப்பகப் பணி (IRSS)
*இந்திய ஆய்வு &கணக்குப் பணி (IA& AS)
*இந்திய பொருளியல் பணி (IES)
*இந்திய அஞ்சல் & தொலைத்தொடர்புக் கணக்கு மற்றும் நிதி பணி(IP&TAFS)
*இந்திய இரயில்வே கணக்குப் பணி (IRAS)
*இந்திய இரயில்வே போக்குவரத்து பணி (IRTS)
*இந்திய இரயில்வே பணியாளர் பணி (IRPS)
*இராணுவ பொறியியல் பணி
*இரயில்வே பாதுகாப்பு படை
*இந்திய நில அளவியல் பணி
போன்ற பல்வேறு பணிகள் உள்ளன.

UPSC Civil Services கல்வித் தகுதி :

அடிப்படைக் கல்வியும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் முடித்த யார் வேண்டுமானாலும் UPSC தேர்வை எழுதி வெற்றி பெற முடியும்.
ஆனால் உரிய பயிற்சியும்,முயற்சியும் இல்லாமல் UPSC தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.

UPSC Civil Services 

வயது வரம்பு :

அனைவருக்கும் குறைந்தபட்ச வயது 21.
அதிகபட்சம்:
*பொதுப் பிரிவினர் 33வயது வரை
*இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC)35வயதுவரை
*எஸ்.சி.எஸ்.டி.பிரிவினர்37வயது வரை, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம்.
*பொதுப்பிரிவினர் தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு 6முறை சிவில் சர்வீஸ் தேர்வை எழுதலாம்.
*இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு 9முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம்.
*SC/ST பிரிவினர் தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம்.

UPSC Civil Services Exam :

UPSC Civil Services Exam மூன்று படிநிலைகளைக் கொண்டது.
1*முதல் நிலைத்தேர்வு(Preliminary exam)
2*பிரதானத் தேர்வு (Mains Exam)
3*நேர்முகத்தேர்வு (Personality Test).

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும்.
அறிவிப்பு வெளியானது முதல் 20முதல்25நாட்கள் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும்.
முதல்நிலை தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும்.முடிவுகள் தேர்வு எழுதி ஒரு மாதத்திற்கு பிறகு வெளியிடப்படும்.
இதில் தேர்ச்சி பெற்ற பிறகு 10லிருந்து15நாட்கள் பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும்.
இதில் DAF என்கிற application form நிரப்பி கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும்.
தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும்.
இந்த முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
முதல்நிலை தேர்வு மதிப்பெண்கள் இறுதியில் result ற்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

முதல்நிலைத் தேர்வு (Preliminary exam):

General studies (பொது அறிவுத்தாள்)-100Questions:200Marks

CSAT (குடிமை பணி திறனாய்வு தேர்வு)80Questions:200Marks.

பிரதானத் தேர்வு (Main Exam):

முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவர் மட்டுமே பிரதானத் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர் ஆவார்.
எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவா அதை விட 12 அல்லது 13மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதான தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இது முழுக்க முழுக்க விரிவாக விடை எழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு.
இதில் பதில் அளிக்கும் உங்கள் திறனே முக்கியமானதாகும்.
Mains exam 3மணி நேரம் நடத்தப்படும்.

தேர்வுத் திட்டம்:                   

தகுதித் தேர்வு-இரண்டு தாள்கள் 
கட்டுரை தாள் --ஒரு தாள்  -1×250=250

பொது அறிவு -நான்கு தாள்கள்-4×250=1000

விருப்பப் பாடம் -இரண்டு தாள்கள் -2×250=500

ஆளுமைத் தேர்வு -275மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள்-2025.

பிரதானத் தேர்வுமுறைகள்:

தகுதித் தேர்வு:

தாள் -1

மொழிப் பாடம் -300மதிப்பெண்கள்
மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்யலாம்.

தாள்-2

ஆங்கிலம் -300மதிப்பெண்கள்
தாள் 1மற்றும்2-ல் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பின்வரும் தாள்கள் திருத்தப்படும்.

Mains Exam :

தாள்-1

கட்டுரை பாடத் திட்டம் -250மதிப்பெண்கள்
மாணவர்கள் விரும்பும் மொழியில் எழுதலாம்.

தாள் -2

பொதுத் அறிவு -1(250மதிப்பெண்கள்)
(இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்,உலக வரலாறு, உலக புவியியல், மற்றும் சமூகம்.)

தாள் -3

பொது அறிவு -2(250மதிப்பெண்கள்)
(சமூக நீதி, அரசு நிர்வாகம், அரசியல், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உறவுகள்).

தாள் -4

பொது அறிவு -3(250மதிப்பெண்கள்).
(தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, உயிர் பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை).

தாள்-5

பொது அறிவு -4(250மதிப்பெண்கள்)
(நெறிமுறைகள்,நேர்மை, மற்றும் திறனறிவு).

ஏதாவது ஒரு விருப்பப் பாடம் 

தாள்-6

விருப்பப் பாடம் தாள் -அ--250மதிப்பெண்கள்

தாள் -7

விருப்பப் பாடம் தாள் -ஆ--250மதிப்பெண்கள்

Personality Test:

மொத்த மதிப்பெண்கள் 275.


UPSC Civil Services Exam எழுத வேண்டும் என்ற கனவு இருக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவு நிச்சயமாக உபயோகமாக இருந்திருக்கும்.எது எப்படி இருந்தாலும் முழு முயற்சியுடன் படிக்க வேண்டும்.time table போட்டு அதன்படி படிக்க வேண்டும்.உங்கள் நேரத்தை படிப்பதற்கு முழுவதும் செலவிட வேண்டும்.அப்படிச் செய்தால் நிச்சயம் உங்கள் IAS கனவு நிஜமாக்கும்.நன்றி....





Post a Comment

0 Comments