Best Engineering Colleges in Tamil Nadu/தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள்


Best Engineering Colleges in Tamil Nadu/தமிழகத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள்


12th class result is here. Children will have a dream of getting admission in a good engineering college. Similarly, parents will have a desire to get their children admitted in a good engineering college.


But which college to join? 

Which college is a good college? There are many confusions that our children's future will be better if they study. Here is the list of best engineering colleges in Tamil Nadu...

SIST Chennai:

Satyabama Institute of Science and Technology, Chennai is ranked 54th in the NIRF rankings. The institute has alliances with various international institutes and industrial institutes and has various experienced professors and infrastructure facilities.


SSNCE Chennai:

Sivasubramania Nadar College of Engineering in Chennai is ranked 48th in the NIRF rankings in India. The college is known for its excellent services such as vocational studies, excellent professors and excellent infrastructure.

Shastra Thanjavur:

Shanmukha Academy of Arts Science Technology and Research, Thanjavur, offers research-quality education in various disciplines, including postgraduate and undergraduate. Ranked 41st nationally, Sastra is renowned for its research and innovation.

KARE  Srivilliputhur

Kalasalingam Research and Education University, Srivilliputhur is a nationally ranked 39th ranked educational institute. The college is characterized by quality education, experienced professors and leading institute in innovation and research.


SRM Chennai:

SRM University of Science and Technology, Chennai is not only ranked 24th in NIRF ranking in India but also an internationally renowned educational institute. Students from many states of India have studied in this college and have achieved various achievements. Diverse students, culture and experienced professors, as a national institution with outstanding structure. 

This college is functioning as a famous college.


AVV Coimbatore:

Ranked 19th in NIRF ranking in India, Amrita Vishwa Vidyapeedham College of Coimbatore is a leader in quality education. Experienced top professors, this college is a leading institution in quality education and infrastructural facilities.

Anna University Chennai:

In TamilNadu Anna University is said to be engineering education for many years. With such pride and tradition, Anna University is ranked 17th in NIRF rankings. Its Gindi campus and branch campuses are providing excellent services in engineering education.

VIT Vellore:

Many of the institute's alumni have made significant innovations in the field of technology. With such pride and infrastructure, the Vellore Institute of Technology is ranked 12th in the NIRF ranking.

NIT Trichy:

The National Institute of Technical Education, an educational institution of the central government, has been ranked 8th in the NIRF ranking. This educational institution has produced various researchers and technicians and is functioning as one of the best government educational institutions.

IIT Madras:

It is teaching from undergraduate to research studies in the field of Arts, Science and Technology. Indian Institute of Technology, Chennai is a central government educational institution located in Guindy. IIT NIRF, an educational institution where students can come and study not only at the national level but also at the international level, ranks first in the ranking.

 

12ஆம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டது.அடுத்து ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற கனவு பிள்ளைகளுக்கு இருக்கும்.அதே போல தங்கள் பிள்ளைகள் நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும் ஆசையுடன் இருப்பார்கள்.

ஆனால் எந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பது? எந்த கல்லூரி நல்ல கல்லூரி?எங்கு படித்தால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று பல குழப்பங்கள் இருக்கும்.இதற்கான விடையாகத்தான் தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது....

SIST சென்னை:

சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் NIRF தரவரிசையில் 54ஆவது இடத்தைப் பிடித்த கல்லூரி.பல்வேறு சர்வதேச கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்களோடு கூட்டமைப்பை வைத்துள்ள இந்தக் கல்வி நிறுவனம் பல்வேறு அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.


SSNCE சென்னை:

சென்னையில் இயங்கிவரும் சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி இந்திய அளவில் NIRF தர வரிசையில் 48ஆவது இடத்தில் உள்ளது.தொழிற்கல்வி சார்ந்த ஆய்வுகள், தலைசிறந்த பேராசிரியர்கள் மற்றும் சிறப்பான கட்டமைப்பு என சிறப்பான சேவை புரிந்து வருகிறது இக்கல்லூரி.

சாஸ்த்ரா தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் இயங்கி வரும் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அகாடமி முதுகலை மற்றும் இளங்கலை என பல துறைகளில் ஆய்வுத் தரத்தில் கல்வி சேவை புரிந்து வருகிறது.தேசிய அளவில் தரவரிசையில் 41ஆவது இடத்தில் உள்ள சாஸ்த்ரா அதன் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.


KARE  ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி பல்கலைக்கழகம் தேசிய அளவில் தர வரிசையில் 39ஆவது இடத்தில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனமாகும்.தரமான கல்வி, அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளில் முன்னணி நிறுவனமாக இந்தக் கல்லூரி இயங்குகிறது.

SRM சென்னை:

சென்னையில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்திய அளவில் NIRF தர வரிசையில் 24ஆவது இடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிரபலமான கல்வி நிறுவனமாகவும் விளங்குகிறது.இந்திய அளவில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.பன்முகத்தன்மை கொண்ட மாணவர்கள், கலாச்சாரம் மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள், தலைசிறந்த கட்டமைப்பு என தேசிய அளவில் பிரபலமான கல்லூரியாக இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

AVV கோயம்புத்தூர்:

இந்திய அளவில் NIRF தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த அம்ரிதா விஷ்வா வித்யாபீதம் கல்வி நிறுவனம் தரமான கல்வியில் முன்னிலை வகிக்கிறது.அனுபவமிக்க தலைசிறந்த பேராசிரியர்கள் தரமான கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை:

தமிழகத்தில் 

இன்ஜினியரிங் கல்வி என்றாலே அண்ணா பல்கலைக்கழகம் என்றுதான் பல ஆண்டுகளாக கூறப்படுகிறது.அத்தகைய பெருமை மற்றும் பாரம்பரியம் மிக்க அண்ணா பல்கலைக்கழகம் NIRF தர வரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளது.இதன் கிண்டி வளாகம் மற்றும் கிளை வளாகங்கள் பொறியியல் கல்வியில் சிறந்த சேவையை புரிந்து வருகிறது.

VIT வேலூர்:

தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள பலரும் இந்த கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள்தான்.அத்தகைய பெருமை மற்றும் கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இந்த வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி NIRFதர வரிசையில் 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

NIT திருச்சி:

மத்திய அரசின் கல்வி நிறுவனமாகிய தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் NIRF தர வரிசையில் 8ஆம் இடம் பெற்றுள்ளது.பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்கியுள்ள இந்தக் கல்வி நிறுவனம் அரசு கல்வி நிறுவனங்களில் தலை சிறந்த ஒன்றாக இயங்கி வருகிறது.

IIT மெட்ராஸ்:

கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கற்பித்து வருகிறது.மத்திய‌ அரசு கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி சென்னை கிண்டியில் அமைந்துள்ளது.தேசிய அளவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் மாணவர்கள் வந்து கல்வி பயிலக்கூடிய கல்வி நிறுவனமான IIT NIRF தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது.

என்ன பிரண்ட்ஸ் இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் நன்றி...

Post a Comment

0 Comments