தமிழகத்தின் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகள்/ Best Arts & Science Colleges in Tamil Nadu
12th Class Results are here!, there will be confusion and confusion about which college to study next. This confusion is not only for the children but also for the parents of the children who want to enroll their children in good quality colleges. List of leading colleges in Tamil Nadu for students who want to join Arts and Science courses.
It is given here.Using this you can decide which college to join.
State College Chennai:
The oldest college in Chennai is the state college located by the Marina beach. The college has studied from Nobel laureate Sarciv Raman to the current Chief Minister M. K. Stalin. It is ranked 3rd nationally in the NIRF rankings, surpassing private colleges. It is providing excellent infrastructure and quality of education.
Loyola College Chennai:
Loyola College, Chennai, where former finance minister P. Chidambaram and other famous people have studied, is Loyola College, Chennai. This hundred year old college has been doing excellent service in terms of academic quality, structure and reliability. Students from various states are also studying in this college. It is ranked fourth nationally in NIRF ranking.
Loyola College.
PSGR Krishnammal College for Women Coimbatore:
This college is a 60 years old college which has produced various women personalities. Such an old college PSGR Krishnammal College for Women is functioning in Coimbatore.
NIRF ranked 6th nationally ahead of women's colleges in the capital.
Madras Christian College Chennai:
The 186 year old Madras Christian College has been an educational eye opener for lakhs of students. This college has produced many leading leaders and stars and is ranked 17th in the NIRF rankings. Students from different countries and states are studying in this college.
PSG College of Arts and Science Coimbatore:
PSG College of Arts and Science, which has been serving the education sector for 72 years, is operating in Coimbatore. It has been ranked 20th in the national NIRF rankings.
Thiagarajar College Madurai:
One of the oldest colleges in Madurai, Thiagarajar College of Arts and Science is ranked 22nd nationally in the NIRF rankings. This college is the premier among the three major colleges in Madurai.
St. Joseph's College Trichy:
St. Joseph's College of Arts and Science, Trichy, which is ranked 26th in the NIRF rankings in India, is a leader in quality education.
Vausi College Tuticorin:
Famous in Tuticorin for over 70 years, VU Chidambaranar College is ranked 30th nationally in the NIRF rankings and offers undergraduate, postgraduate and research courses.
Kongunadu Arts and Science College Coimbatore:
This Kongunnadu College of Arts and Science, which has been excelling in educational services in Coimbatore for the past 50 years, is ranked 31st in the NIRF rankings at the national level.
Government Arts College Coimbatore:
This Government College of Arts is an important government college that makes the educational dreams of Coimbatore students come true. It is ranked 32nd in the NIRF rankings at the national level.
My heartiest wishes to join your favorite colleges and achieve your future dreams!!…
12ஆம் வகுப்பு Results வந்தாச்சு!, அடுத்து என்ன எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்ற யோசனையும் குழப்பமும் இருக்கும்.இந்தக் குழப்பம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பிள்ளைகளின் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது நல்ல தரமான கல்லூரிகளில் சேர்த்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.அப்படி கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக தமிழகத்தில் கல்வி சேவையில் முன்னணியில் உள்ள கல்லூரிகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி நீங்கள் எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.
மாநில கல்லூரி சென்னை:
சென்னையின் மிகப் பழமையான கல்லூரிதான் மெரினா கடற்கரை ஓரமாக இருக்கும் மாநில கல்லூரி.நோபல் பரிசு வாங்கிய சர்சிவி.ராமன் முதல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை படித்த கல்லூரி.தேசிய அளவில் NIRF தர வரிசையில் தனியார் கல்லூரிகளையே மிஞ்சும் அளவிற்கு 3ஆம் இடத்தில் உள்ளது.சிறந்த கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை அளித்து வருகிறது.
லயோலா கல்லூரி சென்னை:
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல பிரபலங்கள் படித்த கல்லூரி சென்னையில் உள்ள உள்ள லயோலா கல்லூரி.நூற்றாண்டு பழமையான இந்தக் கல்லூரி கல்வித் தரம், கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை என கல்வி சேவையில் சிறந்த பணியாற்றி வருகிறது.பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.NIRF தரவரிசையில் தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது லயோலா கல்லூரி.
PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோயம்புத்தூர்:
பல்வேறு பெண் ஆளுமைகளை உருவாக்கியுள்ள இந்தக் கல்லூரி 60ஆண்டுகள் பழமையான கல்லூரி.இத்தகைய பழமை வாய்ந்த PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது. NIRF தரவரிசையில் தேசிய அளவில் 6ஆவது இடத்தைப் பெற்று தலைநகரின் மகளிர் கல்லூரிகளையே பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ளது.
மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி சென்னை:
186வருடம் பழமையான மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி பல இலட்சம் மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறக்கும் இடமாக விளங்கி வருகிறது.பல முன்னணி தலைவர்களையும், நட்சத்திரங்களையும் உருவாக்கிய இக்கல்லூரி NIRF தரவரிசையில் 17ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்:
72ஆண்டுகளாக கல்வித்துறையில் சேவை புரிந்து வரும் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது.தேசிய அளவில் NIRF தர வரிசையில் 20ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தக் கல்லூரி.
தியாகராஜர் கல்லூரி மதுரை:
மதுரையில் உள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்று இந்த தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தக் கல்லூரி தேசிய அளவில் NIRF தரவரிசையில் 22ஆம் இடம் பிடித்துள்ளது.இந்தக் கல்லூரி மதுரையில் உள்ள மூன்று முக்கியக் கல்லூரிகளில் முதன்மையானதாக விளங்கி வருகிறது.
புனித ஜோசப் கல்லூரி திருச்சி:
இந்திய அளவில் NIRF தர வரிசையில் 26ஆவது இடம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த புனித ஜோசப் கல்லூரி தரமான கல்வியில் முன்னிலை வகிக்கிறது.தலைசிறந்த பேராசிரியர்கள், தரமான கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னணி கல்வி நிறுவனமாகவும் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
வஉசி கல்லூரி தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரபலமான 70ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையில் சிறந்து விளங்கும் இந்த வஉ சிதம்பரனார் கல்லூரி தேசிய அளவில் NIRF தர வரிசையில் 30ஆம் இடத்தில் உள்ளது.இங்கு இளங்கலை மற்றும் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்:
கடந்த 50வருடங்களாக கோவையில் கல்வி சேவையில் சிறந்து விளங்கும் இந்த கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய அளவில் NIRF தர வரிசையில் 31ஆம் இடத்தில் இருந்து வருகிறது.
அரசு கலைக்கல்லூரி கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாணவர்களின் கல்விக் கனவை நிஜமாக்கும் முக்கியமான அரசுக் கல்லூரிதான் இந்த அரசு கலைக்கல்லூரி.தேசிய அளவில் NIRF தர வரிசையில் 32ஆவது இடத்தில் உள்ளது.சிறந்த கலைத்துறை சார்ந்த படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த படிப்புகளை வழங்கி வருகிறது.
உங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து படித்து உங்கள் எதிர்கால கனவை அடைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!...
0 Comments
Thank you 🙏